உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் இன்று முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, Webcast Government Video Portal என்கிற இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக வழக்கு விசாரணை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையை பொது மக்கள் நேரலையாகக் காணலாம்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது அமர்வின் விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.








