செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் புதிய அணு ஆயுத டிரோனை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் நீண்ட நாட்களாக பகை நிலவி வருகிறது. இதனிடையே தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்த இரு நாடுகளும் சேர்ந்து கடந்த வாரம் கூட்டுப்போர் படை பயிற்சியில் ஈடுபட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த கூட்டுப்போர் படை பயிற்சிக்கு பதலடி தரும் விதமாக வடகொரியா தற்போது ஒது அணு ஆயுத சோதனையை நிகழ்த்தியுள்ளது. இதுவரை உலக நாடுகள் எதுவும் முயற்சி செய்யாத செயற்கை சுனாமி என்னும் ஆயுதத்தை வடகொரியா கையில் எடுத்துள்ளது.
அதாவது, கடலுக்கு அடியில் டிரோன் அணு ஆயுதத்தை செலுத்தி, அந்த டிரோன் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் சுமார் 60 மணி நேரம் பயணம் செய்து பின்னர், அதனை வெடித்து சிதற வைத்து செயற்கை சுனாமியை ஏற்படுத்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிரிநாட்டு கடற்படைகள், மற்றும் துறைமுகங்களை தாக்கி அழிக்க வடகொரியா திட்டமிட்டுள்ளது.