நாளை “அயலான்” படம் குறித்த முக்கிய அறிவிப்பு..! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள, அயலான் படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு நாளை அறிவிக்க உள்ளது. அயலான் படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று…

ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள, அயலான் படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு நாளை அறிவிக்க உள்ளது.

அயலான் படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுட்டிருக்கின்றனர். இந்த வேளையில், படத்தின் தயாரிப்பாளரான கேஜேஆர் ராஜேஷ், “அயலான்” படம் குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், எங்களின் பிரம்மாண்ட படைப்பு ‘அயலான்’ பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். அதிலும் இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, நாளை ஏப்ரல் 24, 2023 காலை 11:04 மணிக்கு ‘அயலான்’ அறிவிப்பை வெளியிட உள்ளோம்.

“அயலான்” திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாளைய அயலான் அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். ‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள் என படத்தின் தயாரிப்பாளரான கேஜேஆர் ராஜேஷ் கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.