முக்கியச் செய்திகள் இந்தியா

செல்போன், டிவி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு – நிர்மலா சீதாராமன்

செல்போன், கேமரா லென்ஸ், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களின் உதிரிபாதங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், “மகளிருக்கான சேமிப்பு திட்டத்தின் கீழ் 7.5% வட்டி வழங்கப்படும். முதியோருக்கான அஞ்சலக வைப்பு நிதி வரம்பு 15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. வரும் நிதியாண்டில் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் வரி வருவாய் 23.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.

2024 ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.9% நிதி பற்றாக்குறை இருக்கும். லித்தியம் பேட்டரி இறக்குமதிக்கு, சுங்க வரி விலக்கப்படுகிறது. தொலைக்காட்சி பெட்டிகளுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது. செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதற்கான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்.

செல்போன், கேமரா லென்ஸ், தொலைக்காட்சி உதிரிபாதங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. சிகரெட்களுக்கான வரி உயர்த்தப்படுகிறது. அதேபோல் மற்ற புகையிலைப் பொருட்களுக்கான விலையும் உயர்கிறது. 16% வரை வரி உயர்த்தப்படுகிறது.

இணைய பரிவர்த்தனை 4.5 லட்சம் கோடியில் இருந்து 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்தப்படுகிறது. தங்கம், வைரம் ஆகியவற்றிற்காக இறக்குமதி வரியும் உயர்த்தப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மற்றும் மாமியார் கைது!

Jeba Arul Robinson

4 பெண்களுடன் திருமணம்; அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்

G SaravanaKumar

முதலில் ஆவின் பாலை தரமாக கொடுக்க முயற்சியுங்கள் – டாக்டர் கிருஷ்ணசாமி சாடல்

EZHILARASAN D