2024 மகாராஷ்டிரா தேர்தலில் #‘VoteJihad’ என பரவும் படங்கள் – உண்மை என்ன?

This news Fact Checked by The Quint மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணி 230…

This news Fact Checked by The Quint

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக மட்டும் 132 தொகுதிகளிலும், சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


இந்த நிலையில் நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள மக்கள் தங்கள் மாநில அரசைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும்போது, ​​​​புர்கா மற்றும் ஹிஜாப் அணிந்த பெண்களைக் காட்டும் இரண்டு படங்களைக் கொண்ட ஒரு பதிவு ஒன்று வைரலானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘ ஓட்டு ஜிஹாத் ‘ நடப்பதாக இந்த படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் இப்பதிவில் எனவே  இந்து சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு இப்பதிவிட்ட பயனர் வலியுறுத்தியுள்ளார்.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான படத்தை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவை பழையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான + இரண்டு படங்களும் பழையவை மற்றும் 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கும் இவற்றிற்கும் சமீபத்திய தொடர்பில்லை


முதல் படம் :

முதல் படத்தைப் பிரித்து, அதனை கூகுள் லென்ஸில் தேடியபோது அதே காட்சியை  டைம்ஸ்  ஆஃப் இந்தியா (TOI) வெளியிட்ட அறிக்கையில் கண்டோம் .படத்தின் தலைப்பு நாக்பூர் என்று அடையாளம் காட்டப்பட்டு, “முஸ்லீம் பெண்கள் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்காக நாக்பூரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் திங்கள்கிழமை வாக்களித்தனர்.” என இடம்பெற்றிருந்தது. இந்த செய்தி அறிக்கை 25 அக்டோபர் 2019 அன்று பகிரப்பட்டது மற்றும் மகாராஷ்டிராவில் அப்போதைய சட்டமன்றத் தேர்தல்கள் பற்றி பேசப்பட்டது.

முதல் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தியபோது வேறு கோணத்தில் எடுக்கப்பட்ட அதே காட்சியை காட்டியது. அதன்படி 22 அக்டோபர் 2019 அன்று மராத்தி நாளிதழான லோக்மத் பத்திரிக்கையின்அறிக்கையில் இது பகிரப்பட்டது. அதுவும் நாக்பூர் என்று அடையாளம் காட்டியது.


இரண்டாவது படம் :

இரண்டாவது படத்தை பிரித்து அதனை Google லென்ஸ் தேடடியபோது பிரிட்டிஷ் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் ( பிபிசி ) செய்தியின் அறிக்கையில் அதேபடம் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தின் லொகேஷனை எங்களால் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், இது 2019 முதல் ஆன்லைனில் கிடைக்கிறது என்பதும், மகாராஷ்டிராவில் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களுடன் தொடர்பில்லாதது என்பதும் தெளிவாகிறது. இந்த அறிக்கை 13 ஏப்ரல் 2019 அன்று வெளியிடப்பட்டது மற்றும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த படங்களாகும்.

முடிவு: 

மகாராஷ்டிரா தேர்தலில் முஸ்லிம்கள் ஓட்டு ஜிஹாத் செய்வதாக பரவும் இரண்டு படங்களும் பழையவை மற்றும் தவறான சூழலுடன் பகிரப்படுகின்றன. இதற்கும் மகாராஷ்டிரா சமீபத்திய தேர்தலுக்கும் தொடர்பில்லை

Note : This story was originally published by The Quint and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.