ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் இளையாராஜாவின் இசைநிகழ்ச்சி – எழுந்து நின்று பராட்டிய மோடி!

கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் நடைப்பெற்ற இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று பிரதமர் பாராட்டினார்.

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் நடைபெற்று வருகிறது. முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு எனும் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவின்  இசைநிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா தன் குழுவினருடன் சேர்ந்து திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து வாசித்தார். தொடக்கத்தில், இளையராஜா இசையமைத்த ஓம் சிவோஹம் என்ற பாடலை பாடினார். அந்த பாடல் முடியும் போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அடுத்து இளையராஜா, சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்பொனியையும் இசைத்தார். இதனை பிரதமர் மோடி மற்றும் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும்  ரசித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.