வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் 22வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.
https://twitter.com/vp_offl/status/1539848324924071937
இந்த படத்திற்குத் தற்காலிகமாக NC22 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசைக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
வெங்கட் பிரபு உடன் இணைவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இளையராஜா படம் வெற்றி பெற வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தெலுங்கிலும், படத்தை இயக்கும் வெங்கட் பிரபு குறித்து இளையராஜா அந்த வீடியோவில் தெலுங்கில் பேசி பதிவிட்டுள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக யுவனுடன் சேர்ந்து இளையராஜாவும் இப்படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் என்பது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.








