முக்கியச் செய்திகள் தமிழகம்

“அடுத்த பொதுக்குழுவில் இபிஎஸ் பொதுச்செயலாளராக உருவாவார்” – கே.பி.முனுசாமி

அடுத்த பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களால் உருவாகுவார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, அதிமுக தலைவர்கள் ஒவ்வொருவராக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“1.5 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம் அதிமுக. அந்த தொண்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், ஒற்றை தலைமைதான் வேண்டும் என மனு கொடுத்துள்ளார்கள். அந்த மனு மீது அடுத்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. அடுத்த பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி, உறுதியாக அதிமுக பொது செயலாளராக தொண்டர்களால் உருவாவார்” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அதிமுக கட்சி முழுவதும் ஒற்றை தலைமையை விரும்புகிறது, எனவும் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டு மொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து, அதன் படி தீர்மானங்கள் அனைத்தும் இன்று நிராகரிக்கப்பட்டது என கூறினார்.

ஒற்றை தலைமை தேவை என்பதை கருத்தில் கொண்டு அந்த தீர்மானத்தை கொண்டு வர பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணத்தை மேடையிலேயே முன்னாள் அமைச்சர் சி.வீ.சண்முகம் வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

அடுத்த மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒரு முடிவு எட்டிவிடும் என கூறினார். அதிமுகவின் உட்சபட்ச அதிகாரம் பொதுகுழுவுக்கே எனவே அடுத்த பொதுக்குழுவை கூட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகாரம் கொடுத்துள்ளார்கள், அந்த அதிகாரத்தின் படி பொதுக்குழு கூட்டப்படும் என டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் நத்தம் விஸ்வநாதன், ஒற்றை தலைமை தீர்மானம் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் எனவும் சட்டத்திற்கு உட்பட்டே ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசு

Ezhilarasan

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை நமீதா பரப்புரை!

Gayathri Venkatesan

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 6 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும்! – வானிலை மையம்

Dhamotharan