முக்கியச் செய்திகள் இந்தியா

ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் 42 எம்எல்ஏ-க்கள்

சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை துண்டிக்க வேண்டும் என்றும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான ஏக்நாத் ஹிண்டே தலைமையில் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் முகாமிட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதலில் அவர்கள் குஜராத்தின் சூரத்தில் முகாமிட்டனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து அஸ்ஸாமின் குவஹாத்தி நகருக்குச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் சூரத்தில் இருந்தபோது 15 இருந்த ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தற்போது 42 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள சிவ சேனா எம்எல்ஏக்கள் 55 பேரில் 34 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக உள்ளனர். அதோடு, சுயேட்சை எம்எல்ஏக்கள் 8 பேரின் ஆதரவும் அவருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியால் பலனடைந்தவர்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர்தான் என தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, இயற்கைக்கு மாறான அந்த கூட்டணியில் இருந்த சிவ சேனா வெளியே வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீது தங்களுக்கு கோபம் இல்லை என்றும் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தாங்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ள அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான தீபக் கேசர்கார், பாஜகவுடன் சிவ சேனா சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தற்போதும் சிவ சேனா வலிமையுடன் இருப்பதாகவும், 20 எம்எல்ஏ-க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையின் நெருக்கடி காரணமாகவே, சிலர் கட்சியைவிட்டு வெளியேறி இருப்பதாகத் தெரிவித்த சஞ்சய் ராவத், சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றார்.

மகாராஷ்ட்ர அரசியலில் நெருக்கடி முற்றியுள்ள நிலையில், இது குறித்த விவாதிக்க தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூட இருக்கிறது. கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், மகாராஷ்ட்ர அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாலியல் வழக்கு: நடிகை காவ்யா மாதவனிடம் போலீஸார் விசாரணை

Halley Karthik

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திடீர் நீக்கம்!

Halley Karthik

ஆளுநர் பேச்சு கண்டனத்திற்குரியது; வைகோ, டிடிவி தினகரன் கருத்து

Arivazhagan CM