இந்தியாவில் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சமயத்தில் OTT(over the top) தளங்களுக்கான சந்தை பல மடங்கு அதிகரித்தது. உலக சினிமாக்களை தாண்டி, வெப் சீரிஸ்களை மக்கள் அதிகம் பார்க்கத்தொடங்கினர். அதற்கு முன்பே நெட்ப்ளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட OTT தளங்கள் தங்களின் சந்தையை இந்தியாவில் பெருமளவில் விரிவுபடுத்தியிருந்தாலும், லாக்டவுனுக்கு பிறகு பயணாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் Breaking bad, money heist, squid game, peaky blinders, Stranger things உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற பல்வேறு வெப் சீரிஸ்களும் இங்கே பேசுபொருளானது. இதனைத்தொடர்ந்து ஆங்கிலம் புரியாதவர்களும் கண்டு ரசிக்கும் வகையில் Money heist, squid game உள்ளிட்ட web series-கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு தமிழ் ஆடியன்ஸிடம் அமோக வரவேற்பு பெற்றது. ஒரு திரைப்படத்தை தமிழ் டப்பிங்கிற்கு மாற்றுவதே சவாலன காரியமாக பார்க்கப்பட்ட நிலையில் பல சீஸன்களையும், எபிசோட்களையும் கொண்ட webseries-களை தமிழில் மொழி பெயர்த்து அதில் வெற்றியும் கண்டனர் OTT நிறுவனங்கள்.
அந்த வரிசையில் உலகம் முழுவதும் பிரபலமான webseries-ஆன stranger things-ன் நாலாவது சீஸனின் முதல் volume வரும் 27ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இதன் தமிழ், தெலுங்கு மொழி எபிசோடுகளுக்கான டைட்டில் தீம் இசைக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. 4 சிறுவர்கள் விளையாட்டு கூடத்திற்கு விளையாட செல்கிறார்கள். அப்போது ஒரு இசையைக்கேட்டு அதனை நோக்கி ஒரு சிறுவன் செல்ல, மற்றவர்களும் அவனை பின்தொடர ஒரு strange thing நடக்கிறது. கடற்கரை ஓரம் தன் ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் மெய்மறந்து இயற்கையுடன் இளையராஜா இசையால் உறையாடுகிறார்.
இளையராஜாவுக்கு வயதாகிவிட்டத்து இளம் இசையமைப்பாளர்களின் ட்ரெண்டுக்கு அவரால் இசையமைக்க முடிவதில்லை என்ற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில், படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து அப்பாஸ் வியப்பது போல், ஒட்டு மொத்த தமிழ் ஆடியன்ஸும் ‘உங்களுக்கு வயசாகல!’ என்று சொல்வது போல் மெர்சல் காட்டியுள்ளார் இளையராஜா.







