5-வது முறையாக முதலிடத்தில் சென்னை ஐஐடி! இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு!

இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் 5வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கலைக் கல்லூரிகள் ஆகியவற்றிக்கான தரவரிசைப் பட்டியலை என்.ஐ.ஆர்.எப் டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளது.…

இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் 5வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கலைக் கல்லூரிகள் ஆகியவற்றிக்கான தரவரிசைப் பட்டியலை என்.ஐ.ஆர்.எப் டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளது. மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ராஜ் குமார் ரஞ்சன் சிங் இந்த பட்டியலை வெளியிட்டார்.

இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களின் வரிசையில் ஐஐடி மெட்ராஸ் 8வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்திலும், அனைத்துவித கல்வி செயல்பாடுகளில் தொடர்ந்து 5வது முறையாக ஐஐடி மெட்ராஸ் முதலிடலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தலைச்சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பட்டியலில், சென்னை மாநில கல்லூரி 3வது இடத்திலும், சென்னை லயோலா கல்லூரி 7வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதேபோல், மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில், டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடத்தையும், சண்டிகரில் உள்ள பிக்மர் மருத்துவமனை இரண்டாம் இடத்தினையும், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் சிறந்த வேளாண் கல்வி நிறுவனங்களின் பட்டியலில், டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் முதலிடத்தையும், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.