#IGNO பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி… எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?

இக்னோ பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி (Distance education) ஜூலை பருவ மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி செப். 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல…

#IGNO University Distance Education... Do you know when to apply?

இக்னோ பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி (Distance education) ஜூலை பருவ மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி செப். 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல முதுநிலை இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்த சூழலில், மாணவா்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்டோரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஜூலை பருவ மாணவர் சோ்க்கைக்கான கடைசி தேதி செப்.20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ், செமஸ்டா் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது. மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளம் http://www.ignou.ac.in மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.