“எண்ணம் ஆல்டைமும் ரைட்டாருந்தா உன்ன வெல்ல யாரும் இல்ல” – STR குரலில் வெளியானது ‘டீசல்’ படத்தின் 2வது சிங்கிள்!

ஹரிஸ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ‘டீசல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : இபிஎஸ் தலைமையில் பிப்.24-ல் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்!

இத்திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார். இப்படத்தை ‘எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்’ தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இவர்களுடன் கருணாஸ், அனன்யா, விவேக் பிரசன்னா உட்பட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘பீர் சாங்’ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு, ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். இந்தப் பாடலை ரோகேஷ், ஜிகேபி ஆகியோர் எழுதியுள்ளார். டீசல் திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.