உறுதியாக விளையாடினால் வெற்றி பெறலாம் – பிரக்ஞானந்தா

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரரை வெற்றி பெற்ற தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, உறுதியுடன் விளையாடினால் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார்.   சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரரை வெற்றி பெற்ற தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, உறுதியுடன் விளையாடினால் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார்.

 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். இந்த தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா சுவிட்சர்லாந்து வீரர் யானிக்குடன் மோதினர். இந்த போட்டியில் அவர் கருப்பு நிற காய்களுடன் சுவிட்சர்லாந்து வீரரை எதிர்கொண்டார். 67வது காய் நகர்த்தலில் அவர் சுவிட்சர்லாந்து வீரரை வென்று அபார வெற்றி பெற்றார்.

 

வெற்றி பெற்றதற்கு பிறகு தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும், இந்திய ஓபன் பி அணியின் பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரக்ஞானந்தா, நான் எனது ரிசல்ட் குறித்து சந்தோஷ படவில்லை என்றார். வெற்றி பெறுவேன் என்று கூட நினைக்கவில்லை என கூறினார்.

டிரா செய்ய வேண்டும் என தான் நினைத்தேன். நான் தோற்று விடுவேனோ என தான் நினைத்தேன் ஆனால் அடுத்தடுத்து நன்றாக விளையாட அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார். என்னை பொறுத்தவரை கருப்பு வெள்ளை என வித்தியாசம் இல்லை என்றும் எதுவாக இருந்தாலும் உறுதியாக விளையாட வேண்டும் என்றும் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.

 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ரமேஷ், கார்ல்சன் இந்தியாவுக்கு கடினமாக இருப்பார் என நான் நினைக்கவில்லை. அதே சமயத்தில் வீரர்களும் அதே தான் எண்ணுகிறார்கள் என நினைக்கிறேன். எங்கள் தரப்பில் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அர்ஜூன் ஏரிகைசி, குகேஷ் உள்ளிட்ட வீரர்கள் கடந்த சில மாதங்களாகவே ரேட்டிங் அடிப்படையில் முன்னேறி வருகிறார்கள். அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றியை அடிப்படையாக கொண்டு செயல்பட முயற்சி செய்வோம் என தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.