“மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு”: 50 லட்சம் பார்வைகளை நெருங்கும் ரஜினியின் ‘கூலி’ பட டீசர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கத்திலான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கத்திலான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ’ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ரஜினிகாந்த் ‘தலைவர் 171, படத்துக்காக கைக்கோர்ப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது. ரசிகர்களிடையே ரஜினி – லோகேஷ் கூட்டணி குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தற்போது ’வேட்டையன்’ பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தலைவர் 171 படத்துக்கான டைட்டில் டீசர் நேற்று (ஏப். 22) மாலை வெளியிடப்பட்டது. அந்த டீசரில் படத்தின் டைட்டில் ’கூலி’ என அறிவிக்கப்பட்டது. தங்கம் தொடர்பான வாட்ச் உள்ளிட்ட பொருட்களுடன் நிழலான தொழிலில் ஈடுபட்டிருக்கும் மர்ம கும்பல் மத்தியில் ரஜினிகாந்த் என்ட்ரி கொடுப்பதும், பஞ்ச் டயலாக்ஸ் மத்தியில் அடியாட்களை அதகளம் செய்வதும் டீசராக இடம்பெற்றுள்ளது.

இந்த டீசர் வெளியான ஓரிரு மணி நேரத்தில் 20 லட்சம் பார்வைகளை கடந்ததில், லோகேஷ் ரசிகர்கள், டீசரை பிரித்து மேய்ந்து வருகின்றனர். டீசரில் ஒளிந்திருக்கும் கூறுகள் பலவற்றிலிருந்து இது சூர்யா தோன்றவிருக்கும் ’ரோலக்ஸ்’ கதைக்கு முன்வருவது என சுவாரசிய கதைகளை ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் தனது LCU வரிசையில் தற்போதைய ரஜினியின் கூலி படத்துக்கான டைட்டில் டீசரும் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“கூலி” திரைப்படத்தின் டீசர் வெளியாகி 17 மணிநேரம் ஆன நிலையில், தற்போது வரை 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.