குந்தவை கதாபாத்திரத்தில் மூழ்கிய திர்ஷா

ஒட்டு மெத்தத் தமிழ் திரைத்துறையிற்கே 64 ஆண்டுகாலமாகக் கனவாகவே இருந்த , பொன்னியின் செல்வன் திரைப்படம், இம்மாதம் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை லைகா…

ஒட்டு மெத்தத் தமிழ் திரைத்துறையிற்கே 64 ஆண்டுகாலமாகக் கனவாகவே இருந்த , பொன்னியின் செல்வன் திரைப்படம், இம்மாதம் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வறுக்கிறது.

ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்திக், நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாயும், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷா ஆகியேரை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவது மணிரத்னத்திற்கு மட்டும் கனவு இல்லை. ஒட்டு மெத்தத் தமிழ் திரைத்துறையிற்கே 64 ஆண்டுகாலமாகக் கனவாகவே இருந்த நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷா ட்விட்டரில் தனது பெயரைக் குந்தவை என மாற்றியுள்ளார். இவரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.