இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்றால் கடும் நடவடிக்கை..!

அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின்…

அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..

” அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கடந்த 6 மாதத்தில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்த 6 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தர ரத்து செய்யப்பட்டுள்ளது”  என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.