ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்; தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளியாகிய விரக்தியில் இளைஞர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளியாகிய விரக்தியில் இளைஞர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர் கிராமத்தைச்
சேர்ந்த மாரிச்செல்வம்(25) என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். மாரிச்செல்வம் கடந்த ஆண்டுகளில் செல்போனில் சாதாரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்தவர், நாளடைவில் அதற்கு அடிமையாக தொடங்கி உள்ளார்.

ரம்மி விளையாட்டில் அடிமையாகிய நிலையில் அதிகமான பணத்தையும் இழந்து ரூ25
லட்சம் கடனில் தவித்துள்ளார். இதில் ரூ10 லட்சம் கடனை திருப்பி செலுத்தியதாக
கூறப்படுகிறது. இருப்பினும் கடன் தொகை காரணமாக தீராத மன உளைச்சலில் தவித்து வந்த மாரிசெல்வம் மதுவில் விஷம் கலந்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.

அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த
நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி
வைத்து சங்கரன்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.