“தவெக கூட்டணியில் பாமக உள்ளே வந்தால் விசிக வெளியே செல்லும்” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

தவெக கூட்டணியில் பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறும் என்று அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விசிக் சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மானப் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்ற பிறகு பல மாற்றங்களை செய்து வருகிறேன், சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி வருகிறேன். திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு தன்னை வெற்றி பெற செய்த திமுக கூட்டணி கட்சியினருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழ் தேசியம் தான் உயிர்மூச்சு என விசிக முழங்கி இயங்கி வருகிறது, அமைச்சர் பதவி இருக்கும் இல்லாமல் போகும் ஆனால் விசிக தான் எனக்கு முக்கியம்.

சாதிய வாத, மதவாத பாமக பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை. தவெக கூட்டணியில்
பாமக உள்ளே வந்தால் விசிக வெளியே செல்லும். விடுதலைக்காக இயங்குகிற இயக்கமாக விசிக உள்ளது. தமிழ் தேசியத்தை வைத்து சிலர் பிழைப்பு வாதம் செய்கிறார்கள்.
சாதி ஒழிப்பு தான் தமிழ் தேசியம், தேர்தல் வரும் போகும் சாதி ஒழிப்பு தான் மக்களுடைய விடுதலை வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.