3-வது டி20: வெஸ்ட் இண்டீஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து அக்.7-ஆம் தேதி, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. .இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 43 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து அக்.9 -ஆம் தேதி 2-வது டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 249 ரன்கள் எடுத்தது. அனால் இந்திய பந்து வீச்சாளர்கள விக்கெட்டுகளை எடுக்க தவறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதனால் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டி20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்து செய்தது.

அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் துவக்கவீரர் சஞ்சு சாம்சன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து ஆடிய மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா நிலைத்து ஆடி 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். மேலும் இஷன் கிஷன் 37 ரன்களுக்கும், திலக்வர்மா 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவேளையில் வெக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய ஆணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ், ஷமார் ஜோசப், ஷமார் ஸ்பிரிங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி யின் துவக்க ஆட்டக்காரர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பூரன் 42 ரன்களும், ஹெட்மேயர் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மேலும் ஷமார் ஸ்பிரிங்கர் 35 ரன்கலும், ரூதர்ஃபோர்ட் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய ஆணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், மயங்க் அகர்வால் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியில் மூலம் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.