தமிழகம் வெற்றி நடை போட்டால் தாங்கள் அரசியலுக்கு வந்து இருக்க மாட்டோம், என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம் என்றார். அதே நேரம் ரஜினி எடுத்த முடிவு அவரது விருப்பம் என்றும், அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை, என்றும் கமல்ஹாசன் கூறினார்.
வழக்கமாக மக்களிடம் தான் அரசியல்வாதிகள் வாக்குறுதி தருவார்கள், ஆனால் செல்லும் இடமெல்லாம் மக்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக, வாக்குறுதி தருவது மகிழ்ச்சியாக உள்ளதாக, கமல்ஹாசன் கூறினார்.







