மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அன்புமணி ராமதாஸ்!

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில், “இது விவசாயிக்கும் அரசியல் முதலாளிக்கும் நடைபெறும் தேர்தல்”…

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில், “இது விவசாயிக்கும் அரசியல் முதலாளிக்கும் நடைபெறும் தேர்தல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த கூட்டணிக்கு காரணம் சமூக நீதி இட ஒதுக்கீடு. 10.5 சதவிகித தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளார் டாக்டர் ராமதாஸ். அதனைப் தந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது விவசாயிக்கும் அரசியல் முதலாளிக்கும் நடைபெறும் தேர்தல். இதில் விவசாயி வெற்றி பெற்றாக வேண்டும். ஸ்டாலினுக்கு உண்மையிலேயே திராணி இருந்தால் தைரியம் இருந்தால் என்னிடம் நேரடியாக மோத வேண்டும். அதை விட்டுவிட்டு காடுவெட்டி குருவின் மனைவியை தூண்டி விட்டு இங்கே அரசியல் செய்யப் பார்க்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக கூட இருக்க தகுதி இல்லாதவர், முதலமைச்சர் கனவில் இருக்கிறார். என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், “கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆ.ராசா முதலமைச்சரை பற்றி தரக்குறைவாக பேசியதை ஏற்க முடியாது. முதல்வரின் தாயாரைப் பற்றி தரக்குறைவாக பேசிய ராசா தண்டிக்கப்பட வேண்டியவர். முதலமைச்சராக ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? மீடியாக்களின் ஆதரவு இல்லாவிட்டால் ஸ்டாலின் பூஜ்ஜியம். அவருக்கு சரித்திரம் அறிவியல் கணக்கு கூட தெரியாது.” என்றும், “ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு இதுவரை அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப் படாமல் இருக்கிறது அந்த நிலத்தை பயனாளர்களுக்கு திருப்பித்தர வேட்பாளர் பாலு போராடுவார்.” என்றும் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டபோது உரையாற்றியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.