தமிழக சட்டசபையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய சௌமியா அன்புமணி,
“இயற்கை கொடுத்த வரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய சொத்தான நீர் வளம் நம்மளை விட்டு செல்கிறது. சதுப்பு நிலம் இருந்தால் மழை நீரை தேங்கி வைத்துக் கொள்ள முடியும். எந்த அளவிற்கு மழை பெய்தாலும் வெள்ளம் வராது. கூவம் ஆறு என்பது மிகப்பெரிய அதிசயம். கூவம் ஆறு தூர் வாருவது முக்கியமில்லை. அதில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை தவிர்க்க வேண்டும்.
நல்ல தண்ணீரில் கழிவுகள் கொட்டப்படுவது சட்டப்படி குற்றம். இந்த கழிவுகள் கொட்டப்படுவது தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஆற்றை அழகுப்படுத்துவதை விட தூய்மை படுத்த வேண்டும். ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நீர்நிலைகள் மாயமாகிவிட்டது. தமிழகத்தில் பல்வேறு ஆறுகள் உள்ளது அந்த ஆறுகளை முதலில் இணைக்க வேண்டும். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், இது போன்ற செய்தால் அந்தந்த மாவட்டங்களுக்கு தண்ணீரை சுலபமாக பெற்றுக்கொள்ள முடியும். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
பாலாற்றில் தடுப்பணை திட்டம் செய்து தர வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் முழுமையாக தூர்வாரினால், போதுமான தண்ணீர் தமிழகத்தில் கிடைத்து விடும். வெளிமாநிலத்தை சார்ந்து தண்ணீருக்கு காத்துக்கொண்டிருக்கும் நிலை தேவையில்லை. கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் , கடன் வாங்கி கடன்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




