#INDvsZIM : ”நானாக இருந்தால் இதைத்தான் செய்வேன்” – போட்டியில் வெல்ல இந்திய அணிக்கு ஷேவாக் அட்வைஸ்………!

டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

டி 20 உலகக்கோப்பை தொடரின்  சூப்பர் 8 சுற்றின் தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 187 ரன்களை விரட்டிய இந்திய அணி 111 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்தும் பேச்சுகள் எழுந்துள்ளது.

அபிஷேக் ஷர்மாவுக்கு இந்த டி20 உலகக் கோப்பை தொடர் சிறப்பானதாக அமையவில்லை. உடல் நலப்பாதிப்பிற்குள்ளான அப்ஷேக் சர்மா, லீக் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட்டாகினார். மேலும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் 12 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு இந்தியா ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது : ”நானாக இருந்தால் அபிஷேக் சர்மாவுக்கு ஒரு ப்ரேக் கொடுத்து, சஞ்சு சாம்சனை முயற்சி செய்வேன். ஏனென்றால் இந்த ஆட்டத்தில் தோற்றுவிட்டால், இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். இது மிகவும் முக்கியமான போட்டியாக இருப்பதால், இந்தியா ஃபார்ம் அடிப்படையிலதான் அவர்களின் பிளேயிங் லெவன் அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.