நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியுள்ளார். அந்த பதிவில், “பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்பிற்கு இடையே, எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.

என்னைப் பார்த்து, பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார் என்றால், அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்ன பட்டம் கொடுப்பார்?

தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்க முடியாமல், என் பெயரைக் குறிப்பிட்டு தன் தாத்தாவைப் பற்றி பேசுகிறாரா? ஆக, அரசியல் கத்துக்குட்டி உதயநிதி ஸ்டாலின் தெரிந்து பேச வேண்டும்.

இன்று உலகின் பணக்காரக் குடும்பங்களுள் ஒன்றாக ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் ஆட்சி தேவையா?

குடும்ப ஆட்சியை, வாரிசு அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் வீழ்த்திடப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.