மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் வருகிற அக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதனிடையே, தவெக சார்பில் முதல்வர் விஜய் உள்பட காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் நட்சத்திரப் பேச்சாளர்களாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தவெக சார்பில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல்:
முதல்வர் விஜய், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத், பெ. விஸ்வநாதன், வன்னி அரசு, மரிய வில்சன், எம்எல்ஏ முஸ்தபா, மணிகண்டன் (லயோலா மணி), மயூரி, சம்பத் குமார், கேதரின் பாண்டியன், அப்துல் ஜலீல், சிவக்குமார் (முகில் வீரப்பன்), அனந்த்ஜித் மகியா, அறிவழகன், ராஜ்குமார், தென்னரசு, வினோத், விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன், கமலி, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகைதீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், ரவிகுமார், சிந்தனைச் செல்வன், வைகைச்செல்வன், வீரவிக்னேஸ்வரன், ராவுத்தர், புகழேந்தி, செல்வின் இன்பராஜ். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




