திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் 10- 15 இடத்திற்கு காங்கிரஸ் காத்திருந்தால், கடைசியில் மனதில் மட்டும் தான் இடம் கிடைக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ள பழ.கருப்பையா விமர்சித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா, பாஜகவின் பி-டீம் என மக்கள் நீதி மய்யம் கட்சியை குற்றம்சாட்டும் திமுக தான், பாஜகவின் பி-டீம் என்றார்.
மே மாத தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றால், ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வேண்டியது தானே, என் அவர் கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் குறிய அவர், ஆளும் பாஜக அரசு அனைத்து இடங்களுக்கும் பணம் அனுப்பி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் ஒருகாலத்தில் திமுகவிற்கு நிகராக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது 10 இடத்திற்கும் 15 இடத்திற்கும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கடைசியில் மனதில் மட்டும் தான் இடம் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.







