சாதிச் சான்றிதழ் – அரசு விளக்கம்

இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக அரசு விளக்களித்துள்ளது. “கலப்புத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை அல்லது தாயின் சாதியின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்குவது…

இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக அரசு விளக்களித்துள்ளது.

“கலப்புத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை அல்லது தாயின் சாதியின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசிடம் வந்துள்ளன. கலப்புத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் பெற்றோரின் விருப்பப்படி, தந்தையின் சாதி அல்லது தாயின் சாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர் என்று அரசாணை உள்ளது.

இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையேயான திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள், பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் தந்தையின் சாதி அல்லது தாயின் சாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என அரசு தெளிவுபடுத்துகிறது. பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில், குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் சாதிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்” என்று அரசு அளித்த விளக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.