”தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையினருக்கு காவி உடை சீருடையாக வழங்கப்படும்!” – ஹெச்.ராஜா பேட்டி

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் போது காவல் துறையினருக்கு சீருடையாக காவி உடை வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  சனாதனம் பற்றி விமர்சித்து பேசிய அமைச்சர்…

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் போது காவல் துறையினருக்கு சீருடையாக காவி உடை வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

சனாதனம் பற்றி விமர்சித்து பேசிய அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தி,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது:

உண்மைகளை பொய் என்றும், பொய்யை உண்மைகள் என்று பேசுபவர்கள் தி.மு.க.,வினர். ஆண்டாள் நாச்சியாரை அவதூறு பரப்பிய வைரமுத்துவை கைது செய்யாமல், சனாதனம் பற்றி பேசும் உதயநிதியை கைது செய்யாமல், தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

பகவத் கீதையில் சொன்னதை பேசிய வள்ளுவர் சனாதனி. கால்டுவெல் வந்த பின்,
மதமாற்றத்துக்காக பல பொய்யான விஷயங்களை கடைபிடித்தனர், என்று அமெரிக்க அறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழர்களை 180 ஆண்டுகளாக திருப்பிப் திருப்பி
பொய்யை சொல்லி அவனை முட்டாளாக்கி வைத்துள்ளனர். அதை மாற்றும் வரை பா.ஜ.கட்சி ஓயப்போவதில்லை.

சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதி குடும்பத்தை சும்மா விடமாட்டேன்,என்று ஒருவர் கூட சொல்ல வரவில்லை. சனாதனத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அதை அளவிட வேண்டிய அவசியம் இல்லை. திருமாவளவனும், சுபவீர பாண்டியனும் பிறந்த பிறகு தான் ஏற்றத் தாழ்வுகள் வந்தன.

கடந்த 1944 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்ட தேச துரோகிகள். புராண காலங்களில் வர்ணம் விட்டு வர்ணம் மாறியதற்கான ஆதாரங்கள் உள்ளன. கல்கி கிருஷ்ண மூர்த்தியை எம்.எஸ்.சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டது உதாரணம். இவ்வாறு பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார்.

தொடர்ந்து, ஹெச்.ராஜா உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.