இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷூக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை உலக அளவில் 8 ஆவது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரருமான குகேஷ் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் குகேஷூக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய குகேஷ், நட்புடன் முதலமைச்சர் உரையாடியதாகவும், ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியதாகவும் தெரிவித்தார். சதுரங்க போட்டிகள் நன்றாக பிரபலமாகியுள்ளதாகவும், தற்போது போன்று தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.







