ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கீடு முறையில் மாற்றம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி கணக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி கணக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொரோனா காரணமாக இந்த தொடருக்கான பல்வேறு போட்டிகள் ரத்தான நிலையில், அணிகள் பெற்ற புள்ளிகள் சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இருப்பினும், அந்த point systemல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதில் ஒவ்வொரு வெற்றிக்கும் 12 புள்ளிகளும், டிரா செய்தால் 4 புள்ளிகளும், ஆட்டம் டை ஆனால் 6 புள்ளிகளும் வழங்கப்படும் என திருத்தப்பட்ட புள்ளி கணக்கீட்டு முறையை ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த முறை ஒவ்வொரு தொடருக்கும் ஒரே மாதிரியான புள்ளிகள் வழங்கப்பட்டது. அதாவது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராயினும், 5 போட்டிகள் கொண்ட தொடராயினும், ஒரே முறையே பின்பற்றப்பட்டது. இந்த சிஸ்டம் விமர்சினத்திற்குள்ளான நிலையில், புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

 

https://twitter.com/ICC/status/1415190009322348544

அடுத்த மாதம் தொடங்கும் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், பங்கேற்கவுள்ள 9 அணிகளும், தலா 6 தொடர்களில் விளையாடவுள்ளன. 3 தொடர்கள் தங்கள் சொந்த மண்ணிலும், 3 தொடர்கள் வெளிநாட்டிலும் விளையாடவுள்ளதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.