இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம் ஐசிசி விதித்துள்ளது. சுப்மன் கில் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய இரு அணிகளும் தாமதமாக பந்துவீசியதாக இரு அணிகளுக்கும் ஐசிசி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சின் போது 5 ஓவர்கள் தாமதமாக பந்துவீசியதாகவும், ஆஸ்திரேலியா அணி 4 ஓவர்கள் தாமதமாக பந்துவீசியதாகவும் ஐசிசி விதிமுறைகள்படி அவை போட்டியின் விதிமுறைகளை மீறும் செயல் எனவும் விதிகள் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன.
எனவே ஐசிசி விதிகளின் படி, ஒரு ஓவர் தாமதமாக வீசப்பட்டால் அந்த அணியின் ஒவ்வொரு வீரருக்கும் அந்த போட்டியின் 20 சதவிகித சம்பள பிடித்தம் செய்யப்படும். அதனடிப்படையில் 5 ஓவர்கள் தாமதமாக வீசிய இந்திய அணிக்கு 100 சதவிகித சம்பள பிடித்தமும், 4 ஓவர்கள் தாமதமாக வீசிய ஆஸிக்கு 80 சதவிகித சம்பள பிடித்தமும் செய்யப்பட்டுள்ளது.
அதே போல சுப்மன் கில் கேட்சுக்கு நடுவர்கள் கொடுத்த முடிவை விமர்சித்ததாக கூறி, கில்லுக்கு அவரது ஒரு போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவிகித சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







