வங்கதேசத்தில் உள்ள மசூதியில் பணம் எண்ணுவது போன்ற காட்சியை,
தமிழகத்தில் நடைபெற்றது போல டுவிட்டரில் பதிவு செய்து வதந்தி பரப்பிய,
பாஜக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம். இவரை
சைபர் கிரைம் காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்து புழல் சிறையில்
அடைத்தனர். வங்கதேசத்தில் உள்ள மசூதியில் பணம் எண்ணுவது போன்ற
காட்சியை, தமிழகத்தில் உள்ள மசூதியில் நடைபெறுவது போல சித்தரித்து,
சமூக வலைத்தளத்தில் பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் பதிவு செய்ததாக
கூறப்படுகிறது.
இதனால், இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்தனர். இதன் பேரில், சைபர்
கிரைம் காவல் துறையினர் விசாரணை செய்து, பாஜக மாவட்ட செயலாளர்
செல்வத்தை நேற்று நள்ளிரவு கைது செய்து புழல் சிறையில்
அடைத்தனர்.
—கு. பாலமுருகன்







