உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி கடந்த 2019-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது
இந்தியாவில் அக்டோபா 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன.
கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக். 5-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.
இந்த நிலையில், முக்கிய பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திறகு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்த பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா, கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.







