ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்து தொடர்ந்து பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நடந்து வருகிறது. அந்தவகையில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பொதுத்துறை செயலாளராக சுந்தரவல்லி ஐஏஎஸ், சுற்றுச்சூழல் துறை செயலாளராக காக்கர்லா உஷா ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொழில் முனைவோர் மேம்பாடு ஆணையராக சுப்ரியா சாஹுவும், தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் செயலராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ்-ம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராக ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உயர்கல்வித் துறை செயலாளராக தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவராக அருண் ராய் ஐ.ஏ.எஸ்.-ம், வனத்துறை செயலாளராக காகர்லா உஷா ஐ.ஏ.எஸ்.-ம், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக அதுல் ஆனந்த், போக்குவரத்து துறை செயலாளராக நிர்மல் ராஜ், தொழில்துறை ஆணையராக உமாநாத் ஆகியோரும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.