பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் , “தனக்கும், தனது மறைந்த தாயாருக்கும் எதிராக மிக மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதை நாடும், உலகமும் பார்த்தது. இதுபோன்ற செயல்களால் சமூகத்தில் கோபம் ஏற்படுவது புரிகிறது. ஆனால், சிறுவயதில் தவறுகள் நடப்பது இயல்புதான் என்றும், அதைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
தவறிழைத்த அந்தப் பிள்ளைகளை தண்டிப்பது, நீதிமன்றங்களுக்கு இழுப்பது அல்லது சமூக ரீதியாக துன்புறுத்துவது போன்ற செயல்களுக்குப் பதிலாக, சமூகம் அவர்களை அரவணைத்து சரியான வழியைக் காட்ட வேண்டும். நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன், சமூகமும் இந்த உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் நாட்டுக்காக ஒன்றிணைந்து முன்னேற வேண்டும், செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டும். நாடு வேகமாக முன்னேறி வருவதாகவும், ஒவ்வொரு இளைஞரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே தனது விருப்பம். நீங்களும் முன்னேற வேண்டும் என்பதே எனது கனவு. நான் உங்களுக்காக வாழ்கிறேன். உங்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்காக என்னை அர்ப்பணிக்கிறேன். வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, முன்னேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.




