மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்: தமிழிசை சவுந்தரராஜன்

மக்கள் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடுவேன் என புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன், பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு பெறுவதையொட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர்…

மக்கள் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடுவேன் என புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன், பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு பெறுவதையொட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் மாளிகையில் தற்போது எவ்வித கோப்புகள் தேங்குவதில்லை. ஆளுநர் பணியுடன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அரசுக்கு ஆலோசனை வழங்கி வருவதற்கு வரவேற்பு தெரிவித்தார்.

பின்னர் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அரசியலில் தூய்மையை கடைபிடித்ததாகவும், தற்போது ஆளுநர் பணியிலும் மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருவதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.