நிதிநிலைமை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் தெரிவிப்பேன் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனியார் உணவகத்தைத் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், மனிதநேயம் தான் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற முதல்வரின் வழிகாட்டுதல்படி அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறோம். மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் தரமான உணவு உண்ண வேண்டும். அந்த மனித நேயத்தோடு தனியார் உணவகத்தைத் திறந்து வைத்தேன்.
அதேவேளையில், அம்மா உணவகமும் செயல்படும். கடந்த ஆட்சியில் மதுரையில் அரசு மருத்துவமனையில் உணவகத்திற்காக விடப்பட்ட டெண்டரில், வாடகை பணம் செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளது. நீதிமன்றங்களில் விரைந்து வழக்குகளை விசாரிப்பதில்லை. அவ்வளவு நம் நாட்டின் சிஸ்டமாக உள்ளது என்றார்.
-ம.பவித்ரா







