தேசத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன்- மம்தா பானர்ஜி

நாட்டை பிரிப்பதை தடுக்க என் உயிரைக்கூட கொடுக்க தாயராக இருக்கிறேன். ஆனால் நாட்டை பிரிக்க விடமாட்டேன் என்று இந்த ஈகை திருநாளில் நான் உறுதியளிக்கிறேன் என்று கூறினார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான்.…

நாட்டை பிரிப்பதை தடுக்க என் உயிரைக்கூட கொடுக்க தாயராக இருக்கிறேன். ஆனால் நாட்டை பிரிக்க விடமாட்டேன் என்று இந்த ஈகை திருநாளில் நான் உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். பல்வேறு நாடுகளில் புனித ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தியாவிலும் இன்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு நகரங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வழிபட்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை கூறினார்.

மேலும், வங்காளத்தில் அமைதியை விரும்புகிறோம். எங்களுக்கு கலவரம் வேண்டாம். நாங்கள் எப்போதுமே அமைதியை விரும்புகிறோம். நாட்டில் பிளவுகள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாட்டில் பிளவுகளை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நாட்டை பிரிப்பதை தடுக்க என் உயிரைக்கூட கொடுக்க தாயராக இருக்கிறேன். ஆனால் நாட்டை பிரிக்க விடமாட்டேன் என்று இந்த ஈகை திருநாளில் நான் உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.