காற்று வாங்கப் போனேன்…

சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கவிஞர் வாலி, மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசனின் வரிகளால் ஈர்க்கப்பட்ட பின்னர், திரைப்பட வாய்ப்புகளை பெற்றதை அறிந்திருப்போம். பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வாலி,…

சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கவிஞர் வாலி, மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசனின் வரிகளால் ஈர்க்கப்பட்ட பின்னர், திரைப்பட வாய்ப்புகளை பெற்றதை அறிந்திருப்போம். பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வாலி, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன் எனக்கு உண்ணச் சோறில்லை, அவரைச் சந்தித்த பின்பு சோறுண்ண நேரமில்லை என்று வெளிப்படையாக பதிவு செய்தார்.

ஒருமுறை எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி சிறப்பான பல்லவி தந்தால் எனது கைக்கடிகாரம், செயின், மோதிரம் அனைத்தையும் தந்து விடுகிறேன் என கூறி ஆர்மோனியம் மீது வைக்க உடனே அவர் அசந்து போகும்படி காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை எழுதினார்.

பல புத்தகங்கள் படித்து பெற வேண்டிய தத்துவங்களை நான்கு நிமிட பாடலில் தந்த கவிஞர் வாலி எழுதி, முதலில் நிராகரிக்கப்பட்ட பாடல் கொடுத்ததெல்லாம் கொடுத்தான். இதனை முதலில் நிராகரித்த எம்.எஸ் விஸ்வநாதன், பல ஆண்டுகளுக்குப் பின்னர் எம்ஜிஆர் நடித்த படகோட்டியில் இடம் பெறச்செய்தார். நிராகரிக்கப்பட்ட பாடல் சூப்பர்ஹிட் ஆனது.

ஒன்றல்ல… இரண்டல்ல ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார் வாலிபக் கவிஞர் வாலி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.