நான் முன்னெரெல்லாம் இருசக்கர வாகனத்தில் 249 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வேன் ஆனால் சில வருடங்களாக வேகமாக செல்வதை குறைத்து விட்டேன் என பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இயக்குனர்
செல்அம் இயக்கத்தில் பிரபல யூடூபர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கவுள்ள
“மஞ்சள் வீரன்”திரைப்படத்தின் பூஜை மற்றும் முதல் தோற்றம் வெளியிடும்
நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கதாநாயகன் டிடிஎஃப் வாசன்,
இயக்குனர் செல்அம் மற்றும் தயாரிப்பாளர் கவிதா பிரியதர்ஷினி, ஸ்ரீதர் மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய படத்தின் இயக்குனர் செல்அம், தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்கள் தான் தேவைப்படுகிறது. இதனால் டிடிஎஃப் வாசனை ஒரு ஆண்டுகளுக்கு மேலாக கண்காணித்த பிறகு அவரை கதாநாயகனாக நியமித்ததாக கூறினார்.
இதையடுத்து பேசிய கதாநாயகன் டிடிஎஃப் வாசன், முதலில் இருசக்கர வாகனத்தில் தான் 249 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும், தற்போது அதிவேகமாக செல்வதில்லை எனவும் கூறினார். அதோடு அரசு அறிவித்துள்ள 40 கி.மீ வேகத்தில் மட்டுமே இனி இருசக்கர வாகனத்தில் பயணிக்க உள்ளதாகவும் கூறினார்.







