”தாலி ஹிஜப் இரண்டையும் பெண்ணடிமைத்தனமாகவே நான் பார்க்கிறேன்” என நவீன் முகமதலி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம், குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவித்துண்டு போன்ற உடைகளை அணிந்துவந்தனர். இதனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் வரவிடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்தது. இந்த விவகாரம் தீவிரமானதையடுத்து, கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இயக்குநரும் தயாரிப்பாளருமான நவீன் முகமதலி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் அதில், “தாலி ஹிஜப் இரண்டையும் பெண்ணடிமைத்தனமாகவே நான் பார்க்கிறேன். ஆனால், எப்படி தாலி கட்டிக்க கூடாது என்று நிர்பந்திக்க முடியாதோ, அப்படியே ஹிஜப் அணிய கூடாது என்றும் நிர்பந்திக்க முடியாது. இஸ்லாமியராக பிறந்த என் தாய் பர்தா அணியவில்லை. ஹிந்துவாக பிறந்த என் மனைவி தாலி கட்டிக்க மறுத்தார்.
ஆனால், அது இரண்டும் அவர்கள் எடுத்த முடிவு. யாருடைய ஆதிக்கத்தாலும் நிர்பந்திக்கபட்டவை அல்ல. பெண்கள் என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை அந்த பெண்களே முடிவு செய்ய வேண்டும். இதில் உத்தரவிட தந்தைக்கோ கணவனுக்கோ இந்த சமூகத்திற்கோ உரிமை இல்லை” இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








