அரசியலில் விடாமுயற்சி எடுத்தேன் – அமைச்சர் மூர்த்தி

அரசியலில் விடா முயற்சி எடுத்து அமைச்சராக இருப்பது போன்று மாணவர்கள் விடா முயற்சி எடுக்க வேண்டுமென அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.   மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல்…

அரசியலில் விடா முயற்சி எடுத்து அமைச்சராக இருப்பது போன்று மாணவர்கள் விடா முயற்சி எடுக்க வேண்டுமென அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில, 12 ஆம் வகுப்பு பயின்று நீட் தேர்வுக்கு தயராகும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான இலவச உண்டு உறைவிடப்பயிற்சி பள்ளிகல்விதுறை சார்பில்
நடைபெற்றது..

இந்த பயிற்சி வகுப்பினை பத்திரபதிவுதுறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட
ஆட்சியர் அணிஷ்சேகர் துவக்கி வைத்தனர். பின்னர் தமிழ்வழியில் நீட் தேர்வுக்கான
தயாரிக்கப்பட்ட கைடு வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி,
நீட் தேர்வில் விலக்கு என்பது தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
நீட் தேர்வு அச்சத்தால் சில மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில்
விதிவிலக்கிற்காக முதல்வர் முயற்சி செய்து வருகின்றார். அரசு பள்ளியில் பயின்ற
மாணவர்களும் மருத்துவராக ஆக வேண்டும் என மாணவர்களுக்கு இங்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது என்றார்.

படித்து பெரிய நிலைக்கு வரமுடியவில்லை என்பதால் அரசியலுக்கு வந்தோம்.
அரசியலிலும் விடாமுயற்சி எடுத்து பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ என
அடுத்தடுத்து நிலைகளை எட்டி இன்று அமைச்சராக உள்ளேன். நீங்களும் விடாமுயற்சி எடுத்து மருத்துவராக ஆக வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கேட்டுக்கொண்டார்.

 

மாணவர்கள்பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்.எனக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பொறுப்பு என்பது கந்துகட்டிகாரன் போல் அல்லாமல் அரசை ஏமாற்றுபவர்களிடமிருந்து முறையாக வரிபணத்தை அரசுக்கு பெற்றுதரும் பணியை சிறப்பாக செய்து வருகின்றேன் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.