25 வயதிற்குள் திருமணம் செய்யவில்லை என்றால்… டென்மார்க்கில் வினோத சடங்கு!

டென்மார்க்கில் உள்ளவர்கள் 25 வயதிற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் அவர்களது குடும்பத்தினர்களால் அவர்களுக்கு இலவங்கப்பட்டை குளியல் கொடுக்கப்படுகிறது. இந்த வினோத பாரம்பரியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நாம் ஒரு மாறுபட்ட உலகில் வாழ்கிறோம்.…

டென்மார்க்கில் உள்ளவர்கள் 25 வயதிற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் அவர்களது குடும்பத்தினர்களால் அவர்களுக்கு இலவங்கப்பட்டை குளியல் கொடுக்கப்படுகிறது. இந்த வினோத பாரம்பரியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் ஒரு மாறுபட்ட உலகில் வாழ்கிறோம். அதாவது ஒவ்வொரு நாடும், கண்டம் அல்லது பிராந்தியமும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள், கலாசாரங்கள் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளன. இந்த நம்பிக்கைகள் வெளியாட்களுக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், அவற்றை நம்பும் மக்கள், தொடர்ந்து அந்த பாரப்பாரியத்தை பின்பற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, டென்மார்க்கில் திருமணமாகாதவர்களை இலவங்கப்பட்டை பொடியால் குளிப்பாட்டுவது போன்ற ஒரு விசித்திரமான பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இலவங்கப்பட்டை என்பது உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு விதமான மசாலா வகையாகும். டேனிஷ் சமுதாயத்தில், 25வது பிறந்தநாளைக் கொண்டாடும்போது, ​​அவர்களது குடும்பத்தினரால் இலவங்கப்பட்டை பொடியால் குளிப்பாட்டப்படுவார்கள். 25 வயதிற்குள் திருமணம் ஆகி குடியேற முடியவில்லை என்றால், இது ஒரு தண்டனையாகத் கொடுக்கப்படும் என்றும் மேலும், இது மக்களைக் கேலி செய்வதற்கும் குழப்புவதற்கும் மற்றொரு வாய்ப்பாக அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இலவங்கப்பட்டை பொடி தலை முதல் கால் வரை குளிக்கிறார்கள், சில சமயங்களில் இலவங்கப்பட்டை நன்றாக ஒட்டிக்கொள்வதற்காக தண்ணீரில் கலந்தும் தெளிப்பார்கள். அத்துடன் சில நேரங்களில் இலவங்கப்பட்டை உடலில் நன்றாக ஒட்டிக்கொள்ளும் வகையிழும், வேடிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் முட்டையுடன் இலவங்கப்பட்டையை கலந்து குளிக்க வைப்பார்கள்.

இந்த பாரம்பரியம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்று மசாலாப் பொருள்களை விற்கும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். வெவ்வேறு ஊர்களுக்கு சென்று விற்பனை செய்வதன் காரணமாக, நீண்ட காலமாக மசாலா விற்பனையாளர்கள் திருமணமாகாமல் இருந்தனர். இத்தகைய ஆண் விற்பனையாளர்கள் பெப்பர் டூட்ஸ் (பெபர்ஸ்வெண்ட்ஸ்) என்றும், பெண்கள் பெப்பர் கன்னிகள் (பெபர்மே) என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த பாரம்பரியம் டென்மார்க்கில் இன்னும் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், 25 வயதிற்குள் தனது வாழ்க்கை துணையை கண்டுபிடித்து செட்டில் ஆகாத மற்றவர்களை மக்கள் மதிக்கமாட்டார்கள். மேலும் டேனிஷ் சமுதாயத்தில் இளமைக்காலத் திருமணத்திற்கு அவசரம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு ஆண்களுக்கு திருமணம் செய்வதற்கான சராசரி வயது 34 மற்றும் ஒன்றரை ஆண்டுகள், பெண்களுக்கு 32 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

– சத்யா விஸ்வநாதன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.