”இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்” – முதலமைச்சர் விஜய்!

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

இளமையிலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திலும் களம் கண்டவர் இமானுவேல் சேகரனார் அவர்கள்.

சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.