I.N.D.I.A. கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ; டெல்லியில் தொடங்கியது!

I.N.D.I.A. கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன.…

I.N.D.I.A. கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட இந்த கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தின் போது 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். .

இதன் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீட்டுக்கான வழிமுறை மற்றும் மக்களவை தோதல் பிரசார வியூகம்  குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.