’STR இயக்கும் படத்தில் நான் நடிக்க வேண்டும். கண்டிப்பாக என்னை அழைக்க வேண்டும்.’ என என நடிகர் கவுதம் கார்த்திக் கூறியுள்ளார்.
பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பத்து தல திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடம் எனவும் தகவல் வந்துள்ளதாகவும், சென்சார் காப்பியில் இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதி தாறுமாறாக இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற பாசிட்டிவான ரிப்போர்ட்ஸ் வருவதால் சிம்பு ரசிகர்கள் இப்படமும் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருப்பதோடு படத்தின் வெற்றியை இப்போதே கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் பத்து தல ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் எடுத்து வருகிறது. ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.
அப்போது நடிகர் கவுதம் கார்த்திக் மேடையில் பேசுகையில், ‘ இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய கதாபாத்திரத்தையே இந்த படத்தில் மாற்றி இருக்கிறீர்கள் கிருஷ்ணா சார். STR இசை வெளியீட்டு விழாவில் என்னைப் பற்றி அழகாகப் பேசியதற்கு நன்றி. எனக்கே கண் கலங்கி விட்டது. STR படப்பிடிப்பில் 3 கதைகள் குறித்துப் பேசினார். நீங்கள் இயக்கும் படத்தில் நான் நடிக்க வேண்டும். கண்டிப்பாக என்னை அழைக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி என நடிகர் கவுதம் கார்த்திக் மேடையில் பேசினார்.








