” என் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர் “ – சரத்பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டி

” என் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர் “ என  சரத்பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில்…

” என் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர் “ என  சரத்பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் வெளியானது. சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில்  நடிகர் சரத்பாபுவின் உடல் நேற்று ஹைதராபாத் ஃபிலிம் சேம்பரில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இரவு அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நேற்று இரவே ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு சாலை வழியாக கொண்டு அவரது உடல் கொண்டு  வரப்பட்டு சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினி காந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…

“ சரத் பாபு ஒரு நல்ல நண்பர் என்னுடன் சேர்ந்து நடித்த முத்து, அண்ணாமலை  உள்ளிட்ட அனைத்து படங்களுமே முக்கியமானது. என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு மரியாதை இருக்கிறது.

எப்போதும் நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து மிகவும் வருத்தப்படுவார்.  சிகரெட் பிடித்து  உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள்  நீண்ட நாள் வாழ வேண்டும்.  என்று அடிக்கடி சொல்வார். அதனால்  அவர் முன்னால் நான் எப்போதும் சிகரெட் பிடிப்பதில்லை.

அண்ணாமலையில் படப்பிடிப்பின்போது ஒரு பெரிய டயலாக் பேச வேண்டும். பத்து பதினைந்து டேக் சென்று எனக்கு சரியாக நடிக்க வராத போது அந்த எமோஷனை அவ்வளவு அழகாக நடித்துக் காட்டினார் .என் உடலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்பவர் இன்றைக்கு இப்படி ஆகி இருக்கிறாய் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நல்ல மனிதருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.