லியோ படபிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய் தன்னை ஆரத்தழுவி பத்திரமாக பார்த்துக் கொண்டாதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அஜித் விக்னேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ஆதாரம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், லியோ படத்தில் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றியதை சந்தோசமாக உணர்வதாகவும் கூறினார். படப்பிடிப்பு தளத்தில் விஜய், தன்னை பத்திரமாக ஆரத்தழுவி பார்த்து கொண்டதாகவும், 20 வருடங்களாக விஜய் மாறாமல் இருப்பது சந்தோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஒய்.ஜி.மகேந்திரன், பாலு அசோசியேட் இயக்குநராக இருக்கும் போது, நான் நடிக்கும் ஆரம்பகட்டத்தில் என்னை தட்டிக்கொடுத்தவர். தற்போது அவருடைய மகள் இயக்கிய படத்தில் நடித்துள்ளேன். இது கண்டிப்பாக சர்ச்சைக்குரிய படம் தான். ஆனாலும், இந்த படத்திற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புவதாக கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








