வாழ்க்கையில் பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளேன் என்றும், தோல்விகள் என்னை வீழ்த்த நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) இந்தியாவின் ஐந்து பேஷன் கல்வி நிறுவனங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. சென்னையில் இந்நிறுவனத்தின் 11ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, தேர்ச்சி பெற்ற 263 மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ், தங்கப் பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”NIFT சென்னையின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. NIFT சென்னை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தனது செயல்பாடுகளை அதிகரித்து வருகின்றது. NIFT சென்னை நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இன்று நீங்கள் பெற்ற பட்டம், உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்தது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறீர்கள். ஃபேஷன் அல்லது ஃபேஷன் தொழில்நுட்பம் என்பது மனித இன பரிமான வளர்ச்சியில் பங்கு கொண்டது. இந்தியா இன்று இருப்பது போல் முன்னாட்களில் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா மிக முக்கிய இடத்தில் இருக்க போகிறது. இலக்கை நோக்கி நாடு இன்னும் வேகமாக செல்ல வேண்டியுள்ளது. ஆத்ம நிர்பார் பாரத் நோக்கி நாடு செல்கிறது. இந்தியாவின் இந்த பயணத்தில், மாணவர்கள் அளிக்கும் பங்கு, அதன் இலக்கை அடைய உந்துகோளாக இருக்கும்.
18ஆம் நூற்றாண்டு முதல் ஜவுளி உற்பத்தியில், உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ரோம பேரரசுக்கு இந்தியாவில் இருந்தது தான் ஆடைகள் சென்றடைந்தன என்பது எத்தனை பேருக்கு தெரியும். ரோமின் பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றலாம் என அவர்கள் ஆலோசிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் தங்கம், ரோம் பெண்களின் ஆடைகளுக்கு செலவிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Muslin என்ற ஆடை வகை ஆந்திராவில் உள்ள மசூலிப்பட்டினம் என்ற இடத்தின் பெயரிலிருந்து தோன்றியது. இரண்டாயிரம் ஆண்டுகளாக நாம் தான் உலக சந்தையில் பெரும் ஆட்டக்காரர்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. அதை மீண்டும் சீர் செய்ய முயன்று வருகிறோம். நாகலாந்தில் பழங்குடியினர் நெய்யும் ஆடைகள் தனித்துவமான அடையாளம் கொண்டவை.
சமீப ஆண்டுகளில் 80,000 ஸ்டார்ட்அப்-களை இந்தியா கொண்டுள்ளது. இளைஞர்கள் இன்று ரிஸ்க் எடுக்கின்றனர். அரசை விட நாடு மிகப்பெரியது. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில், பல திறமைகள் புதைந்து உள்ளன. கனவை மிகப்பெரியதாய் காணுங்கள். கற்றுக்கொள்ளுங்கள், ரிஸ்க் எடுங்கள். எந்த துறையில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுங்கள். நீங்கள் வளர்ச்சி அடைந்தால், நாடும் வளர்ச்சி அடையும். நான் எனது வாழ்க்கையில் பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளேன். ஆனால் தோல்விகள் என்னை வீழ்த்த நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை” என்று பேசினார்.